News
oi-C Jeyalakshmi
சென்னை: ஆளை கொல்லும் கொரோனா வைரஸ்க்கு மிகவும் பிடித்த இடம் நுரையீரல்தான் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருக்க அது இதயத்தையும் பதம் பார்க்கிறது. இந்த நோய் தாக்கி இறந்த ஐந்தில் ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் மூலம் உயிர் பிரிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதயப்பிரச்சினையோ, ரத்த அழுத்தமோ இல்லாதவர்களுக்கு கூட கொரோனா வைரஸ் தாக்கிய பின்னர் இதய முடக்கம் ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளது எனவே நுரையீரலை மட்டுமே கவனிக்காமல் இதயத்தை இதமாக்கும் உணவுகளை சாப்பிட்டு இதயத்தை காக்கும் ஜோதிட பரிகாரங்களையும் செய்தால் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
கொரோனா வைரஸ் தாக்கினாலே முதலில் வறட்டு இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். பாதிப்பு தீவிரமடைந்தால், நோயாளிகள் சுவாசிக்க சிரமப்படுகிறார்கள். நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதால் செயற்கை ஆக்சிஜன் உதவி நிச்சயம் தேவை என்று மருத்துவர்கள் கூறியதன் அடிப்படையில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களை பற்றி தற்போது பல தகவல்கள் சீனா, இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து ஆய்வு அறிக்கைகளை வெளியாகி அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. முதற்கட்ட ஆய்வில், ஐந்தில் ஒரு கொரோனா வைரஸ் நோயாளிக்கு இதய பாதிப்பு ஏற்படுகிறது. அது இதய செயலிழப்புக்கு காரணமாக அமைகிறது. நுரையீரல் பாதிப்பே இல்லாதவர்கள் கூட இதய முடக்கம் ஏற்பட்டு பலியாகிறார்கள் என்பதுதான் அது.

கொரோனாவும் இதயமும்
சீனாவில் மார்ச் மாதம் இரண்டு ஆய்வு அறிக்கைகள் வெளியாகின. அந்த ஆய்வுகள் 416 நோயாளிகளிடம் செய்யப்பட்டது. அதில் 19 சதவீதம் பேர் இதய பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். அதன்படி இதய பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளிகளில் 51 சதவீதம் பேர் இறக்கிறார்கள். அதே சமயம், இதய பாதிப்புக்கு உள்ளாகாத நோயாளிகளில் 4.5 சதவீதம் மட்டுமே இறந்துள்ளனர். கொரோனா வைரஸ் எந்த ரிசப்டார்களில் ஒட்டிக் கொண்டு இருக்கிறதோ, அதே ரிசப்டார்கள் இதயத்தின் தசைகளிலும் உள்ளன. இதை வைத்துப் பார்த்தால், கொரோனா வைரஸ் இதயத்தை நேரடியாக பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஹார்ட் அட்டாக் யாருக்கு வரும்
நல்ல இதயம் இருக்கணும் சார் என்று சொல்வார்கள். ஒருவரின் ஜாதகத்தில் நான்காமிடம் இதயஸ்தானம். தாய்க்கு உரிய இடம் இது. இந்த இடம் பாதிக்கப்பட்டிருந்தால் தாய் வீடு,வாகனம் ,கல்வியில் பாதிப்புகள் ஏற்படும். திடீர் ஹார்ட் அட்டாக்கும் வரலாம். இந்த இடத்தில் சுப கிரகங்கள் பார்வையோ, சேர்க்கையோ இருந்தால் இதயம் இதமாக இருக்கும் எந்த பாதிப்பும் வராது.

சூரியன் கிரகங்கள் கூட்டணி
இதயத்தின் இயக்கத்தை சூரியன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஜாதகத்தில் எட்டாம் பாவாதிபதியாக சூரியன் அமைந்து, அந்த சூரியனோடு தீய கிரகங்களுடன் கூட்டணி ஏற்பட்டு, லக்னமும், லக்னாதிபதியும் பலமிழந்து இருந்தால் அவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

இதயத்திற்கு இதம் தரும் சூரியன்
சூரியன்தான் இதய நோய்கள், கண் நோய்கள், முதுகு வலி, முதுகெலும்பு தண்டு வடத்தில் பிரச்னைகள், ரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் ஏற்பட காரணமாகிறது. ஜோதிட ரீதியா பார்க்கும் போது சூரியன் ராஜ கிரகம். இதயம் ராஜ உறுப்பு. ஜாதகத்துல சூரியன் கெட்டால் இதய முடக்கம், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

குரு செவ்வாய் பார்வை
இதயத்துக்கு தேவை குரு பலம். குரு கெட்டாலும் இதய பிரச்சினை வரும். பொருளாதார பிரச்சினை, சிக்கனம்,சேமிப்பு இல்லாமை ,அஜீரணம்,வாயு கோளாறுகள், இதய படபடப்பு இருந்தால் உங்க ஜாதக கட்டத்தில் குரு பாதிப்பு இருக்கிறது. குரு ஒருவரின் ஜாதகத்தில் நீசம், மறைவு பெற்று இருந்தாலோ ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் உடன் குரு சேர்க்கை பார்வை இருந்தால் உயர் ரத்த அழுத்தம், இதயக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சந்திரன் செவ்வாய்
ஒருவரின் ஜாதகக் கட்டத்தில் மனோகாரகரான சந்திரன் பலவீனமடைந்திருந்தால் அவருக்கு ரத்த அழுத்த பிரச்சினை ஏற்படும். சந்திரனுக்கு 6,8,12இல் குரு இருந்தால் அதனை சகட யோகம் எனக் கூறுவர். அதுபோன்ற அமைப்பு உள்ளவர்களுக்கு இருதயக் கோளாறு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. சூரியன் அல்லது சந்திரன் 4ல் இருந்து சனி மற்றும் செவ்வாயால் பார்க்கப் பட்டாலும் இதய நோய் வரும்.

இதயம் காக்கும் பரிகாரங்கள்
தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்யும் போது ஆதித்ய ஹிருதயம் சொல்லலாம். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஜாதகத்தில் சூரியன், குரு பாதிக்கப்பட்டவர்கள் வேல் உருவ டாலரை கழுத்தில் அணிந்து கொள்ளலாம். கந்த சஷ்டி கவசம், ஆதித்ய ஹிருதயம் படிக்க இதய பாதிப்புகளை தவிர்க்கலாம்.