News
oi-C Jeyalakshmi
சென்னை: உன் செவ்வரி ஓடிய கண்களும் கூரான நாசிகளும், குறுகிய உடுக்கை போன்ற இடையும் என்னை இரவெல்லாம் தூங்க விடாமல் செய்கிறது என்று கவிஞர்கள் கவிதை எழுதுவார்கள். இப்போது ‘காந்த கண்ணழகி லுக்கு விட்டு கிக்கு ஏற்றும் முத்துப்பல்லழகி’என்று பாடுகிறார்கள் கவிஞர்கள். பெண்களுக்கு சில சாமுத்திரிகா லட்சணங்கள் இருக்கிறது. அப்படி அம்சமாக இருந்தால் பெண்கள் செல்வ செழிப்போடு இருப்பாங்க, குடும்பமும் வளமாக இருக்குமாம்.
பெண்களின் சாமுத்ரிகா லட்சணம் பற்றி நிறைய புத்தகங்களில் எழுதியிருக்காங்க. உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் எப்படி இருக்கணும்னு சொல்லியிருக்காங்க. பெண்களின் அங்க லட்சணங்கள் இப்படி எல்லாம் இருந்த ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்லியிருக்காங்க. கல்யாணத்திற்கு பெண் பார்க்கப் போற ஆண்கள் உங்களுக்கு வரப்போகிற மனைவிக்கு சில அம்சங்களாவது இப்படி இருக்கான்னு பார்த்து செலக்ட் பண்ணுங்க.
உருண்டை வடிவ முக அமைப்பு கொண்டவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். பூஜை, விரதங்களில் நிறைய ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பாங்க. நல்ல லட்சியவாதிகளாவும் இருப்பாங்க. நல்ல குணவதியான அவங்களால கணவருக்கு அதிர்ஷ்டம் அதிகம் வருமாம். சாமுத்ரிகா லட்சணம் பெண்களின் முகம் குறித்து மட்டுமல்ல. கண்கள், மூக்கு, நெற்றி, காது, கழுத்து, இடை, தொடை என காலின் கட்டை விரல் வரைக்கும் விலாவாரியாக விவரித்துள்ளது.
செதுக்கிய வடிவ அமைப்பு
நவகிரகங்களும் நன்றாக இருந்தால் முக அமைப்ப அற்புதமாக இருக்கும். சந்திரன், சுக்கிரன் சரியாக இருந்தால் பெண்கள் அழகாக இருப்பார்கள். அங்க லட்சணங்கள் அம்சமாக இருக்கும். நாசி, கண்கள், நெற்றி அமைப்பு போன்றவை சாமுத்ரிகா லட்சணத்திற்கு ரொம்ப முக்கியம். நிலவு ஒரு பெண்ணாகி உலவு கின்ற அழகோ என்று பாடியிருப்பார்கள் பெண்களின் முகம் நிலவு போல பளிச்சென்று இருந்தால் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்.
நிலவு போன்ற முகம்
பெண்களோட கண்கள் சிவந்து நீண்டு இருக்கணுமாம். அடிக்கண் அகன்று மாவடுபோல் இருக்கணும். விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும். புருவம் வில்லைப்போன்று வளைந்திருக்க வேண்டும். பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும். முகத்திலுள்ள மூக்கின் நீளம், கண்களின் இருப்பிடம் மற்றும் தாடையின் நீளம் என அளவெடுத்து செய்தது போல இருக்கணும்.
மென்மையான கூந்தல்
பெண்களின் கூந்தல் கருங்கூந்தலாக இருக்க வேண்டும். அவங்களுக்கு இருக்கிற தலைமுடி மாதிரிதான் வாழ்க்கை அமையுமாம். கோரை முடி குடியை கெடுக்கும் சுருட்டை முடி சோறு போடும் என்பார்கள். கூந்தலில் மலர் மணம் வீசினால் அந்த பெண்கள் இயற்கையிலேயே ரொம்ப அற்புதமானவர்கள். தலைமுடி எந்த அளவிற்கு மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை அமைதியாக மென்மையாக போகும்னு சொல்லுவாங்க. தலைமுடி மொர மொரப்பா இருந்தா அவங்க வாழ்க்கை கரடுமுரமாக இருக்குமாம். கஷ்டப்பட்டு உழைத்துதான் சாப்பிட வேண்டியிருக்குமாம்.
நெற்றி வடிவம்
நெற்றி மேடாகவும் நெற்றியில் 2 அல்லது 3 கோடுகளும் இருந்தாலும் கோடுகள் இருந்தால் சிந்தனைவாதிகளாகவும் அறிவாளிகளாவும் இருப்பார்கள்.
மூக்கின் நுனி கூராக இருந்தால் ரொம்ப புத்திசாலியாக இருந்தால் அதி புத்திசாலியாக அரசாளும் அமைப்போடு இருப்பார்களாம்.
பெண்களின் காது அமைப்பு
சீரான செதுக்கியது போல மூக்கு கொண்டவர்களுக்கு வாழ்க்கை சீராக இருக்கும். குடை மிளகாய் போல மூக்கு கொண்டவர்கள் கொஞ்சம் பயங்கரமானவர்களாக இருப்பார்கள். காது அமைப்பு குறுகியிருந்தால் மனதும் சிந்தனையும் குறுகலாக இருக்குமாம். பரந்த காதுகளை கொண்டவர்களுக்கு பரந்த மனதாக இருக்குமாம்.
தொடை அமைப்பு
பெண்ணின் உதடுகள் உருண்டு திரண்டு பவளம் போலிருந்தால் அழகு. பெண்ணின் பல் வரிசை முத்துக்களைக் கோர்த்தது போல வரிசையாக இருக்க வேண்டும். பெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, தென்னம்பாளை வாசனை, இலுப்பைப்பூ வாசனை, எலுமிச்சை வாசனை, தாழம்பூ வாசனை, தாமரைப்பூ வாசனை வந்தால் அவங்க செல்வச் செழிப்போட இருப்பாங்களாம். தொடை வாழைத்தண்டு போல பளபளப்பாக இருக்கணும்.
பாத வடிவம்
பெண்ணின் பாதம் செந்தாமரை போல சிவப்பாக இருக்க வேண்டும். ஐந்து விரல்களும் பூமியில் பதிய வேண்டும். குதிகால் அகலமாக இருக்கவேண்டும். பெருவிரல் நீண்டிருக்க வேண்டும். இத்தனை அம்சங்களும் கொண்ட பெண் மனைவியாக வந்தால் அதிர்ஷ்டம்தான் இதே
பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழர்களின் No.1 திருமண இணையத்தளத்தில் பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்!