News
oi-C Jeyalakshmi
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவி ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் 7 ஆயிரம் பேரின் உயிரை குடித்துள்ளது. 15 லட்சம் பேர் வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த வைரஸ் இதுவரை 85 ஆயிரம் பேரை காவு வாங்கியுள்ளது. கண்ணுக்குத்தெரியாத எதிரியோடு போரிடும் நிலைதான் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்களை காக்க மருத்துவதுறையினர் தங்களின் உயிரை பணயம் வைத்து போராடி வருகின்றனர். இதற்கு எப்போது முடிவு என்று யாருக்கும் தெரியாது இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் என்னென்ன பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார் இளம் ஜோதிடர் அபிக்யா ஆனந்த்.
அபிக்யா கடந்த ஆண்டு கணித்தது போலவே சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் தனது கோர முகத்தை வெளிக்காட்டி வருகிறது உலகமே அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் பாதிப்பு மே 29ஆம் தேதி முதல் படிப்படியாக குறையும் என்று நம்பிக்கை வார்த்தைகள் சொன்னாலும் அதற்கு முன்னதாக என்னென்ன பாதிப்புகள் வரும் என்று எச்சரிக்கிறார் அபிக்யா ஆனந்த்.
இப்போது மகரம் ராசியில் குரு, சனி, செவ்வாய் கூட்டணி சேர்ந்திருக்கிறது. சனிக்கு மகரம் ஆட்சி வீடு, செவ்வாய் உச்சம் பெற்ற வீடு. மே 4ஆம் தேதி வரை மகரம் ராசியில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கும். அதன் பிறகு செவ்வாய் கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். அதே போல அதிசாரமாக மகரம் ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் ஜூன் 30ஆம் தேதி வரை சஞ்சரிப்பார்.
லாக்டவுன்
மகரம் ராசியில் உள்ள முக்கிய கிரகங்களின் கூட்டணியால் சில பிரச்சினைகள் இருக்கின்றன. கொரோனா வைரஸ் அதிகம் பரவாமல் தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்திற்கு அனுமதி அளித்திருந்தாலும் விவசாய பொருட்கள் சரியாக சென்று சேர்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.
எப்போது வரை பிரச்சினை
இதனால் பெரிய மளிகை கடைகளில் சரக்குகள் வந்து சேர்வதில் தாமதம் ஏற்படுகிறது. அங்கிருந்து சில்லறை கடைகளுக்கு பொருட்கள் கிடைப்பதில்லை. இதனால் சாமான்ய மக்களுக்கு உணவுப்பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த கிரகங்களின் கூட்டணியால் மே 4ஆம் தேதிவரைக்கும் சில பிரச்சினைகள் ஏற்படும். ஆந்திரா, கர்நாடகா, கிழக்கு கடற்கரை பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்கிறார் அபிக்யா.
உணவுப்பிரச்சினை
கொரோனா லாக்டவுன் காரணமாக இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. விவசாய விளை பொருட்களும் உற்பத்தி செய்வது பிற இடங்களுக்கு கொண்டு செல்வதில் தடை உள்ளது. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படுவது விவசாயிகள் மட்டுமல்ல அந்த பொருட்களை சாப்பிடும் மக்களும் மட்டும்தான். விவசாய விளை பொருட்கள் எளிதில் மக்களுக்கு சென்று சேரும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் உணவுப்பிரச்சினையில் சிக்க வேண்டியிருக்கும்.
2021ஆம் ஆண்டிலும் பாதிப்பு
இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் படிப்படியாக குறைந்தாலும் உலகத்திற்கு இருந்த பாதிப்பு உடனே முடிவுக்கு வந்து விடாது. வரும் டிசம்பர் 20ஆம் தேதி மீண்டும் ஒரு பாதிப்பு ஏற்படும். இது மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்றும் இதன் தாக்கம் 2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிவரை நீடிக்கும் என எச்சரிக்கிறார்.
நோய் எதிர்ப்பு சக்தி
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். புதிதாக உருவாகும் வைரஸ் தொற்றுக்களில் இருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது மட்டுமே சரியாக இருக்கும். இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளை விட்டு விட வேண்டும். பன்றியை கொன்று சாப்பிடுவது, மாடுகளை கொன்று சாப்பிடுவது என விலங்குவதை செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதன் மூலம் மட்டுமே இயற்கை அன்னையின் கோபத்தில் இருந்து மனித இனம் தப்பிக்க முடியும் என்கிறார் இளம் ஜோதிடர் அபிக்யா ஆனந்த்.