News
oi-Shyamsundar I
சென்னை: 2021 சட்டசபை தேர்தலுக்காக திமுக போட்டு வைத்து இருந்த அரசியல் திட்டத்தில் லாக் டவுன் காரணமாக பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பல்வேறு முக்கிய பணிகளை செய்ய முடியாமல் அக்கட்சி திணறி வருகிறது.
இந்தியாவில் வேகமெடுக்கும் க்ளஸ்டர் பரவல்… முழு தகவல்
திமுகவின் அரசியல் ஆலோசகராக பிரஷாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டதில் இருந்தே அக்கட்சியின் ஒவ்வொரு நடவடிக்கையும் கவனிக்கப்பட்டு வருகிறது. திமுக செய்யும் பணிகள் என்ன, அதற்கு பிரஷாந்த் கிஷோர் எப்படி ஐடியா கொடுக்கிறார், திட்டங்களை எப்படி வகுத்து கொடுக்கிறார் என்று பலரும் கண்காணித்து வருகிறார்கள்.
ஆனால் தற்போது பிரஷாந்த் கிஷோர் பணிகள் மொத்தமாக முடங்கி உள்ளது. திமுகவிற்காக சரியான திட்டங்களை வகுக்க முடியாமல் பிரஷாந்த் கிஷோர் திணறி வருகிறார்.
இதுதான் ஸ்டைல்
பிரசாந்த் கிஷோர் பொதுவாக தனது அரசியல் திட்டங்களை மூன்று வகையில் செயல்படுத்துவார். முதலில் எந்த மாநிலத்தில் பணிகளை செய்கிறாரோ அந்த மாநிலத்தில் பணிக்கு புதிய ஆட்களை எடுப்பார். அதன்பின் தேர்தல் தொடர்பாக அக்கட்சியுடன் ஆலோசனை செய்து, மாநிலம் முழுக்க இருக்கும் மாவட்ட செயலாளர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்துவார். அதன்பின் தேர்தலுக்கான திட்டங்களை வகுப்பார். அவரின் டீமில் இருக்கும் பணியாளர்கள் இந்த திட்டங்களை நிறைவேற்றுவார்கள்.
இப்போது இதுவரை
திமுகவிற்கு தேர்தல் ஆலோசகராக சேர்ந்து இருக்கும் பிரஷாந்த் கிஷோர் தற்போது தனது அணிக்கு தமிழகத்தில் இருந்து ஆட்களை தேர்வு செய்துள்ளார். ஆனால் இன்னும் அவர்களுக்கு பணிகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. பிரஷாந்த் கிஷோர் தற்போது பீகாரில் இருக்கிறார். இன்னொரு பக்கம் இவர் தேர்வு செய்த ஆட்கள் எல்லாம் சென்னையில் இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையில் எந்த தொடர்பும் இல்லாமல் உள்ளது.
மிக கஷ்டம்
vலாக் டவுன் காரணமாக பிரஷாந்த் கிஷோர் எந்த விதமான பணிகளையும் செய்ய முடியவில்லை. முக்கியமாக தனது டீமில் இருக்கும் ஆட்கள் யாரையும் பார்க்க முடியவில்லை. இன்னொரு பக்கம் திமுகவினர் யாரையும் பார்த்து ஆலோசனை செய்ய முடியவில்லை. இதனால் திமுக தரப்பும் மிகப்பெரிய அதிர்ச்சியில் இருக்கிறது. பணிகள் எல்லாம் திட்டமிட்டபடி நடக்குமா என்று திமுக குழப்பத்தில் உள்ளது.
குழப்பத்திற்கு காரணம்
பிரஷாந்த் கிஷோர் தன்னுடைய பணிகளை முழுமையாக செய்ய குறைந்தது 1 வருடம் எடுத்துக் கொள்வார். இந்த லாக் டவுன் காரணமாக, அந்த பணிகளை பாதிக்கும் என்கிறார்கள். எப்படியும் லாக் டவுன் மொத்தமாக முடிந்து பணிகள் தொடங்க மே இறுதி ஆகிவிடும். அப்படி இருக்கும் போது, மிக குறைந்த நேரத்தில் எப்படி பிரஷாந்த் கிஷோர் எப்படி செயல்படுவார் என்று கேள்விகள் எழுந்துள்ளது.
எவ்வளவு பணம்
பிரஷாந்த் கிஷோருக்கு ஒப்பந்தமாக பல நூறு கோடிகளை திமுக வழங்கி இருக்கிறது. ஆனால் இப்போது லாக் டவுன் காரணமாக, பிகே தனது ஸ்டைல் அரசியலை செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறார். மிக முக்கியமாக தமிழக அரசியல் நிலவரம் என்ன? மக்களின் மனநிலை என்ன என்று தெரியாமல் பிரஷாந்த் கிஷோர் குழம்பி வருகிறார். கொரோனா காரணமாக மக்களின் அரசியல் பார்வையும், அதிமுக மீதான பார்வையும் பெரிய அளவில் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதான் பிளான்
கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு மாதமும் தனது திட்டத்தை செயல்படுத்தி, ஒரு கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதுதான் பிகே ஸ்டைல். பிரதமர் மோடியின் இமேஜை 2014ல் உயர்த்த பிரஷாந்த் கிஷோர் ஒரு வருடம் எடுத்துக் கொண்டார். இதேபோல் ஒருவருடம் திட்டமிட்டு ஸ்டாலின் இமேஜை உயர்த்த கிஷோர் பிளான் செய்து இருந்தார். ஆனால் அதற்கு தற்போது போதிய நேரம் இன்றி திக்குமுக்காடி போய் உள்ளார்.. பிகே என்னும் பிரஷாந்த் கிஷோர்!