News
oi-C Jeyalakshmi
சென்னை: ‘சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே சரண்யே த்ரியம்பகே கௌரி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே’ என்று அன்னை மகாலட்சுமியை வணங்கினால் வறுமைகள் நீங்கும் செல்வ வளங்களும் பெருகும் என்பது நம்பிக்கை. சர்வ சக்திகளுக்கும் ஆதி சக்தியான தேவியே, அனைத்து விதமான மங்களங்களையும் அருள்பவளே, ஜீவராசிகள் அனைத்தையும் காப்பவளே, மூன்று கண்களை கொண்டவளே உன்னை வணங்குகிறேன் என்பது இதன் பொருள். தினந்தோறும் மகாலட்சுமியை இந்த மந்திரம் சொல்லி வணங்குவதன் மூலம் குடும்பத்தில் உள்ள வறுமைகள் அனைத்தும் நீங்கி அனைத்து விதமான செல்வங்களும் வந்து சேரும். நோய்கள் நீங்கும் அஷ்ட லட்சுமியின் அருளும் கிடைக்கும்.
இன்றைக்கு உலகம் முழுவதும் நோய்களை பற்றிய அச்சமும் வேலையில்லாமல் வறுமையின் பிடியிலும் பலர் சிக்கியுள்ளனர். ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு பார்க்காமல் அனைவருமே இப்போதைக்கு அடங்கித்தான் போயுள்ளனர். அடுத்த வேளை உணவுக்கு கூட உத்தரவாதம் இல்லாமல் சிலர் இருக்கின்றனர். வறுமை நீங்கி செல்வ வளம் பெருக மனதார மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். இதன் மூலம் நோய்கள் நீங்கும் செல்வம் செல்வாக்கு உயரும் சகல சம்பத்துகளும் பெருகும்.

“ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா”
மக்களுக்கு வேண்டிய வரத்தை நல்கும் சங்கடஹர கணபதியே தங்களை நமஸ்கரிக்கிறேன். முழு முதற் கடவுளாகவும், பூத கணங்களுக்கெல்லாம் தலைவனாகவும் இருப்பவரே. பக்தர்களை துன்பத்தில் இருந்து காத்து இன்பம் அளிப்பவரே. மக்களை சுற்றியுள்ள எதிர்மறையானவற்றை விலக்கி நன்மைகளைத் தரும் நேர்மறை ஆற்றலை பெறுக செய்பவரே உங்களை மீண்டும் நமஸ்கரிக்கிறேன். சங்கடஹர சதுர்த்தி நாளில் இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக காரியம் சித்தி அடையும், திருமண தடை அகலும், கடன் தொல்லை தீரும்.
இன்றைக்கு வீட்டில் முடங்கியிருக்கும் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். பெரியவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என பலரும் இன்றைக்கு மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மன அழுத்தம் நம் மனதை மட்டுமல்ல உடல் நலத்தையும் சேர்த்து பாதிக்க கூடியது. இதனால் இரத்த அழுத்தம் தாறுமாறாக ஏறும். மன அழுத்தம் இருந்தாலே எல்லா நோய்களும் சேர்ந்து வந்திடும்.மன அழுத்தம் நீங்கி நேர்மறை சக்திகளை அதிகரிக்க சில மந்திரங்களை உச்சரிக்கலாம். மந்திரங்களை கேட்கலாம்.
‘யாதேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:’
யா தேவீ ஸர்வ பூதேஷு சாந்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யைநமோ நம:
ஓம் சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணீ நமோஸ்துதே !!
இந்த மந்திரங்களை மனதிற்குள் எப்பொழுதும் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும். தினமும் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அஷ்டலெட்சுமியின் அருள் கிடைக்கும். மன அழுத்தங்கள் இருந்தாலும் நீங்கும்.
வலம்புரி சங்கு வீட்டில் இருந்தால் தினமும் சுத்தமாக இருந்து அதற்கு பூஜை செய்வது மிக மிக முக்கியம். வலம்புரி சிங்கிற்கு முறையாக பூஜை செய்யும் பட்சத்தில் ஒருவர் தான் இழந்த செல்வங்கள் அனைத்தையும் திரும்ப பெறுவார். அதோடு பலவகையிலும் அவருக்கு செல்வம் வந்து சேரும். வலம்புரி சங்கில் சிறிது நீர் ஊற்றி அதில் துளசி போட்டுவிட்டு, பூஜை செய்து முடித்தபின் அந்த நீரை குடித்துவந்தால் உடம்பில் உள்ள நோய்கள் விலகும்.