News
oi-C Jeyalakshmi
சென்னை: மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின் நகர்வு சில ராசிக்காரர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாதம் ஆண்டுக்கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தை ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியிலும் சஞ்சரிக்கிறார். சனி, குரு மகரத்தில் சஞ்சரிக்கின்றனர். சனி உடன் கூட்டணியில் இருக்கும் செவ்வாய் மாத முற்பகுதியிலே கும்பம் ராசிக்கு மாறுகிறார். புத பகவான் ரிஷபம், மிதுனம் என பயணிக்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்கள் சில விசயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கும் எதையும் ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசித்து முடிவு பண்ணுங்க.
கிரகங்கள் இந்த மாதம் இடம் மாறுகின்றன. மாத பிற்பகுதியில் சூரியன் ரிஷபம் ராசிக்கு மாறுகிறார். செவ்வாய் கும்பம் ராசிக்கும், மேஷம் ராசியில் சூரியனுடன் இணைந்திருக்கும் புதன் ரிஷபம் ராசிக்கும் பின்னர் மிதுனம் ராசிக்கும் இடம் மாறுகிறார். இந்த மாதம் சனி, குரு, சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கள் வக்ரமடைந்து சஞ்சரிக்கின்றன. இந்த கிரகங்களின் சஞ்சாரம் இடம் மாற்றங்களினால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.
வெயிலின் கொடுமையும் கொரோனா தாக்கவும் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த பாதிப்பு எப்போது நீங்கும் என்பதே அனைவரின் கேள்வி. மனதளவில் சோர்ந்து போயிருக்கும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கவும் தன்னம்பிக்கை தரவும் இந்த மே மாத ராசி பலன்களை எழுதியிருக்கிறோம். மே மாதம் கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். இது பொதுவான பலன்கள்தான் ஒருவரின் சுய ஜாதகத்தில் நடைபெறும் தசாபுத்தி அந்தாரம் எப்படி இருக்கிறது என்பது பொறுத்து சில பலன்கள் மாறுபடலாம்.
பிரச்சினைகள் சமாளிப்பீங்க
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்க ராசிக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். சூரியன் உச்சம் பெற்றிருக்கும் இந்த மாதத்தில் நல்ல வேலைகள் கிடைக்கும். பண வருமானத்தில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். உங்களுக்கு பிரச்சினைகள் நீங்கும். நிதி நிலையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் தீரும். நோய் பாதிப்புகள் நீங்கும். புதன் சஞ்சாரம் உங்களுக்கு நன்மைகளை கொடுக்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழில் நடத்துபவர்களுக்கு மே மாதம் பிரச்சினை இருக்கத்தான் செய்யும் இதுவும் கடந்து போகும் என்று எண்ணிக்கொள்ளுங்கள். வியாபாரிகளுக்கு சரக்குகள் விற்று லாபம் வரும்.
கவனமாக இருங்க
கடகம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகளுடன் பேசும் போது கவனமாக இருங்க. வீண் வம்பு வேண்டாம் அப்புறம் சம்பளத்தில கை வச்சிருவாங்க. சோஷியல் மீடியாவில் கவனமாக கருத்துக்களை பதிவிடுங்கள். தவறான கருத்துக்ளை பார்வேட் பண்ணாதீங்க. நிதி நிலைமையை பொறுத்தவரை நல்லா இருக்கும். தொழில் துறையினர் கவனமாக இருங்க. இந்த மாதம் முழுக்கவே நீங்க வண்டி வாகனத்தில வெளியே போகாம இருப்பது நல்லது. பெண்களுக்கு பண வருமானம் ஓரளவிற்கு வரும். அஞ்சனை மைந்தன் அனுமனை வழிபடுங்கள் தைரியம் அதிகரிக்கும் தன்னம்பிக்கை கூடும்.
நெருக்கம் கூடும்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நன்மைகள் அதிகம் நிறைந்த மாதமாக உள்ளது. உங்க ராசி அதிபதி 14 நாட்கள் உச்சமாக இருப்பதால் பிரச்சினைகள் தீரும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு அதிகமாக கிடைக்கும். அப்பாவின் ஆதரவு கிடைக்கும். சூரியன் மாத பிற்பகுதியில் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கப் போவதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். சம்பளத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். சம்பளம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு பணம் வரும். எதிர்காலத்தை பற்றிய பயம் அகன்று நம்பிக்கை தென்படும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்தவர்கள் இணையக்கூடிய நேரம் வந்து விட்டது. செவ்வாய் ஏழாம் வீட்டிற்கு மாறுவதால் திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும். அலுவலகம் சார்ந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
முதலீடுகளில் கவனம்
சிம்மம் ராசிக்கார பெண்களுக்கு சொந்த தொழிலில் இருந்த பிரச்சினைகள் நெருக்கடிகள் தீரும். சொத்துக்கள் மூலம் வருமானம் வரும் சகோதரர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். மனதில் இருந்த பல சங்கடங்கள் விலகி சந்தோஷங்கள் அதிகமாகும். புதிய வேலைகள் கிடைக்கும், சிலருக்கு புதிய பதவிகள் புரமோசன் தேடி வரும். தந்தை வழி உறவினர்களால் நன்மைகள் நடைபெறும். இந்த மாதம் முழுவதும் வயதில் பெரியவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. வியாபாரிகளுக்கு இது ரொம்ப நல்ல மாதம். மாத இறுதியில் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனமாக இருங்க. இந்த மாதம் கொஞ்சம் ஒதுங்கி இருங்க. மாணவர்களுக்கு இந்த மாதம் கல்வியில் இருந்து வந்த பாதிப்புகள் விலகும்.
வீட்டை விட்டு வெளியே போகாதீங்க
கன்னி ராசிக்காரர்களே மே மாதம் உங்களுக்கு ஒளிமயமான மாதமாக இருக்கப் போகிறது. சூரியன் புதன் எட்டாம் வீட்டில் இருக்கும் போது மாதம் பிறக்கிறது. நிறைய சிரமப்பட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். நோயுடன் போராடிக்கொண்டிருக்கிறது உலகம். எப்படா இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என்று யோசிக்கிறீர்கள். ஆரம்பத்தில் ரொம்பவே கவனமாக இருங்க. வீட்டை விட்டு வண்டி வாகனங்களில் போக வேண்டாம். மாத பிற்பகுதியில் சூரியன் எட்டாம் வீட்டில் இருந்து ஒன்பதாம் வீட்டிற்கு போவதால் ரொம்ப ரிலாக்ஸ் ஆவீர்கள். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. சின்னச் சின்ன தொந்தரவுகள் வரலாம். அரசு விசயங்கள் தொடர்பாக பேசும் போது கவனமாக பேசுங்கள் அரசியல்வாதிகளை விமர்சனம் செய்து பிரச்சினையில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.
யோசித்து முடிவெடுங்கள்
கன்னி ராசிக்கு மாத பிற்பகுதியில் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும், நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். மீடியா துறையிலும் திரைப்பட துறையில் இருப்பவர்களுக்கு இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. செவ்வாய் இடப்பெயர்ச்சியால் உங்க உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் வரலாம். சுவாசக்கோளாறுகள் வரலாம், ரத்தத்தில் சில பிரச்சினைகள் வரலாம். கால்களில் எரிச்சல், வலி வரலாம். சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். உணவு விசயத்தில் அக்கறை காட்டுங்கள்.செவ்வாய் பகவானை வணங்குங்கள். வீட்டு சமையலில் துவரம்பருப்பை சேர்த்துக்கொள்ளுங்கள். எந்த முடிவு எடுத்தாலும் யோசித்து எடுங்க வேலை விசயத்தில் கவனமாக இருங்க. அவசரப்பட்டு எந்த வேலையும் விட வேண்டாம்.
பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழர்களின் No.1 திருமண இணையத்தளத்தில் பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்!