News
oi-C Jeyalakshmi
சென்னை: மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின் நகர்வு சில ராசிக்காரர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாதம் ஆண்டுக்கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தை ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியிலும் சஞ்சரிக்கிறார். சனி, குரு மகரத்தில் சஞ்சரிக்கின்றனர். சனி உடன் கூட்டணியில் இருக்கும் செவ்வாய் மாத முற்பகுதியிலே கும்பம் ராசிக்கு மாறுகிறார். புத பகவான் ரிஷபம், மிதுனம் என பயணிக்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களும் தடைகள் நீங்கி முன்னேற்றங்கள் நிறைந்த மாதமாக மாறப்போகிறது.
கிரகங்கள் இந்த மாதம் இடம் மாறுகின்றன. மாத பிற்பகுதியில் சூரியன் ரிஷபம் ராசிக்கு மாறுகிறார். செவ்வாய் கும்பம் ராசிக்கும், மேஷம் ராசியில் சூரியனுடன் இணைந்திருக்கும் புதன் ரிஷபம் ராசிக்கும் பின்னர் மிதுனம் ராசிக்கும் இடம் மாறுகிறார். இந்த மாதம் சனி, குரு, சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கள் வக்ரமடைந்து சஞ்சரிக்கின்றன. இந்த கிரகங்களின் சஞ்சாரம் இடம் மாற்றங்களினால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.
வெயிலின் கொடுமையும் கொரோனா தாக்கவும் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த பாதிப்பு எப்போது நீங்கும் என்பதே அனைவரின் கேள்வி. மனதளவில் சோர்ந்து போயிருக்கும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கவும் தன்னம்பிக்கை தரவும் இந்த மே மாத ராசி பலன்களை எழுதியிருக்கிறோம். மே மாதம் மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதமாக அமையப்போகிறது.
பேச்சில் கவனம்
மகரம் ராசிக்காரர்களே நீங்க இந்த மாதம் உங்க ராசியில இப்போ சனி குரு சேர்ந்து இருக்காங்க. சோதனைகள் வரத்தான் செய்யும் கவனமாக இருங்க. நோய் பாதிப்புகள் வெளியே தெரியும் கவனமாக இருங்க. எந்த நோயிலும் இருந்தும் நீங்க மீண்டு வருவீங்க. உங்க தோல்வியில இருந்து நீங்க பாடம் படிப்பீங்க. பல சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீங்க. நிறைய சக்திகள் அதிகரிக்கும். பேச்சில் கவனமாக இருங்க கோபத்தை கட்டுப்படுத்துங்க. யாரைப்பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம்.
சிக்கலை சமாளிப்பீர்கள்
பெண்களுக்கு உடல்நிலையில் சில பாதிப்புகள் வரலாம் கவனமாக இருங்க. சத்தான உணவுகளை சாப்பிடுங்க. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலை செய்யும் பலர் வீட்டில் இருந்தே வேலை செய்து வருவதால் வேலையில் கவனமாக இருங்க இல்லாவிட்டால் சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். வியாபாரிகள் பிரச்சினைகளை சமாளித்து லாபம் சம்பாதிப்பீர்கள். ஜென்ம சனி இருப்பதால் தலைவலி பிரச்சினைகள் வரலாம்.
நிதி நிலைமை சீராகும்
கும்பம் ராசிக்காரர்களே நீங்க இந்த மாதம் உங்க ராசிக்கு நல்ல மாதம் இது நம்பிக்கையோடு இருக்கீங்க. நம்பிக்கை பொய்க்காது நல்லதே நடக்கும்
தைரியமும் அதிகரிக்கும். உற்சாகமாக இருப்பீர்கள். கணவன் மனைவி பிரச்சினைகள் தீரும். வீட்டில் சொந்த பந்தங்களுடன் சேர்ந்து இருப்பதால் நீங்க சகோதரர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களுக்கு சகோதரர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். வியாபாரம், தொழில் துறையில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். பணம் எல்லாம் இப்படி முடங்கி போச்சேன்ன கவலை பட்டுக்கிட்டு இருந்தீங்க அந்த கவலைகள் தீரப்போகிறது. உங்க பொருளாதார நிலை சீரடையும்.
உற்சாகமான மாதம்
உங்க பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கவனமாக இருங்க இந்த கால கட்டத்தில் அவர்கள் மீது தனி கவனம் அவசியம். மின்சாதனங்களை உபயோகிக்கும் போது கவனமாக இருங்க. நெருப்பில் கவனம் இல்லாவிட்டால் காயங்கள் ஏற்படலாம். வயதானவர்களும் வீட்டிற்குள் பத்திரமாக இருங்க. வெளியே வெயில் தாக்கம் அதிகமாக இருக்கு கூடவே வைரஸ் தாக்கமும் அதிகமாகவே இருக்கு நம்ம ஆரோக்கியத்தில் நாமதான் கவனமாக இருக்கணும். மாணவர்கள் நல்லா ரெஸ்ட் எடுங்க விடுமுறை காலத்தை நல்லா பயன்படுத்திக்கங்க. உங்களுடைய வீட்டில் இருந்த பிரச்சினைகள் நீங்கும் உற்சாகமான மாதமாக அமையப்போகிறது.
தடைகள் நீங்கும்
மீனம் ராசிக்காரர்களே நீங்க இந்த மாதம் உங்களுக்கு தடைகள் நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் தைரியமாக புதிய முதலீடுகள் செய்யலாம். தொழில் செய்பவர்கள் காலம் வரும்வரை காத்திருக்கவும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். வீட்டில் உங்க மதிப்பு மரியாதை கூடும். வீட்டில் நிறைய வேலை இருந்தாலும் உற்சாகமாக செய்வீர்கள். உங்களுக்கு ஏற்பட்டிருந்த பாதிப்புகள் நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் நீங்கும்.
மகிழ்ச்சி அதிகமாகும்
சில நேரங்களில் பணம் வருவது போல இருந்தாலும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலகும். பொருளாதாரம் தடை பற்றிய கவலைகள் வேண்டாம் விரைவில் நீங்கும். உங்க உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க உடற்பயிற்சி பண்ணுங்க. நோய் பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவ சிகிச்சையில் கவனமாக இருங்க. வேலையில் பிரச்சினையா இருக்கே என்று கவலைப்படாதீங்க. சூழ்நிலைகள் மாறலாம் பாதிப்புகள் குறையும். மாற்றங்களினால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழர்களின் No.1 திருமண இணையத்தளத்தில் பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்!