News
oi-C Jeyalakshmi
சென்னை: வாஸ்து பகவானுக்கு உரிய நாளில், அவருக்கு உரிய நேரத்தில் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதே வாஸ்து பகவானை வழிபடுவற்கு இணையானது. வீடுதான் வாஸ்து பகவான் வாஸ்து பகவான் தான் வீடு, நம்முடைய வீட்டினை நாம் தூய்மையாக வைத்திருந்தாலே வாஸ்து பகவானின் அருளாசி கிடைக்கும். சித்திரை 10ஆம் தேதி 23.4.2020 வியாழக்கிழமை வாஸ்துநாள். காலை 8.54 முதல் 9.30 மணி வரை வாஸ்து நேரம். இந்த நேரத்தில் வாஸ்து பகவானை வணங்கினால் வீடு கட்டும் யோகம் தானாக தேடி வரும்.
வீட்டு மனை வாங்கியவர்கள் என்றைக்கு பூமி பூஜை போட்டு வீடு கட்டத்தொடங்க வேண்டுமென்பதை நம் முன்னோர்கள் தெளிவாகக் கூறிச் சென்றிருக்கிறார்கள். கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும்பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும்.
வளமும் நலமும் தரக்கூடியதும், மாற்றமும் ஏற்றமும் தரக்கூடியதுமான நாளாக வாஸ்து நாள் போற்றப்படுகிறது. இந்தநாளில், நாம் செய்யும் வாஸ்து வழிபாடும் பூஜையும் நம்மை கஷ்டங்களில் இருந்து விலக்கி வைக்கும். நமக்கு நல்லனவெல்லாம் தந்தருளும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவோம். இல்லத்தில் ஐஸ்வர்யமும் உள்ளத்தில் அமைதியும் தங்கும்.
வாஸ்து பகவானுக்கு வழிபாடு
வாஸ்து புருஷன் வருடத்தில் நான்கு மாதங்கள் அதாவது ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் உறக்கத்தில் இருப்பார். சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் பூமி பூஜை செய்யலாம். சித்திரை 10 வைகாசி 21, ஆடி 11,ஆவணி 6, ஐப்பசி 11,கார்த்திகை 8, தை 12,மாசி 22 தேதிகளில் வாஸ்து பூஜை செய்ய உகந்த நாட்களாகும். இந்த நாட்களில் வாஸ்து பகவான் மூன்றே முக்கால் நாழிகை வாஸ்து பகவான் விழித்திருக்கின்றார். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களாகும். அதாவது ஒன்றரை மணி நேரம் வாஸ்து பகவான் விழித்திருக்கின்றார்.
வாஸ்து நாளில் வழிபாடு
எனினும் நம்பத்தகுந்த தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. கடந்த 2014-ஆம் ஆண்டு இதே போல் பொது வெளியில் வருவதை கிம் நிறுத்திக் கொண்டார். அப்போதும் இதே போல் அவருக்கு கணுக்காலில் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டதாக வதந்திகள் கிளம்பின. அது போல் தற்போது அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக வதந்திகளை அவர்களது எதிரி நாடுகளில் ஒன்று கிளப்ப வாய்ப்பிருக்கிறது.
கடன் தொல்லை நீங்கும்
வாஸ்து பகவானை வணங்க கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதில்லை. நாளை வாஸ்து நாளில் இனிப்பு செய்யலாம். கேசரி அல்லது சர்க்கரை பொங்கல் செய்து நைவேத்தியம் செய்து வாஸ்து பகவானை வணங்க வீட்டில் ஆனந்தம் பெருகும். வீட்டில் சகல ஐஸ்வர்யமும் பெருகும். கடன் தொல்லைகள் நீங்கும்.
வீடு கட்டும் யோகம்
வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் வாஸ்து நாளில் நிலை, கதவுகளை துடைத்து பொட்டு வைத்து வழிபட நன்மைகள் நடைபெறும். புது வீடு கட்டி குடியேறும் யோகம் வரும். ஜென்ம லக்னத்திற்கு நான்காம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் பலமான வீடு யோகமும் அதிகப்படியான சொத்து யோகமும் உண்டாகும். நான்காம் அதிபதியும், நான்காம் வீட்டையும் குரு போன்ற சுபகிரக பார்வை செய்வது நல்லது. நான்காம் வீட்டதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி சுக்கிரனும் பலமாக இருந்தால் சொந்த வீடு யோகம் உண்டாகி, அதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.
சுகமான வீடு
சொந்த வீட்டுமனை அமையவும் வீடு கட்டவும் ஜாதக ரீதியாக நான்காம் பாவம் பலமாக அமைந்திருக்கிறதா என ஆராய வேண்டும். நான்காம் அதிபதி கேந்திர ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 1,4,7,10 ஆம் இடத்து அதிபதிகளுடன் இணைந்து அமையப்பெற்றோ இருந்தாலும், திரிகோண ஸ்தானங்களில் அமைந்தோ அல்லது 5,9 ம் அதிபதிகளின் சேர்க்கை பெற்றோ இருந்தாலும் சுப ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய, 2,11 க்கு அதிபதிகளின் சேர்க்கைப் பெற்றோ இருந்தாலும் சொந்த வீடு யோகம் உண்டாகும்.
சொந்த வீட்டில் வசிக்கலாம்
ஒருவருக்கு நான்காம் அதிபதி பலம் பெற்று அமைந்திருந்து அதனுடைய திசை அல்லது புத்தி நடைபெற்றாலும், நான்கில் பலமாக அமையப்பெற்ற கிரகத்தின் திசை அல்லது புத்தி நடைபெற்றாலும், சுக்கிரனின் திசை அல்லது புத்தி நடைபெற்றாலும், அத்துடன் கோட்சார கிரக நிலையும் சாதகமாக இருந்தால் அசையா சொத்து யோகம் உண்டாகும்.
நிறைய வீடு கட்டலாம்
பத்தாம் வீட்டிற்குரிய கிரகமும் நான்காம் வீட்டிற்குரிய கிரகமும் இணைந்து கேந்திரத்தில் பலமுடன் நின்று திசை நடைபெற்றால் ஏராளமான வீடுகளை கட்டி விற்பனை செய்யும் யோகம் உண்டாகும். லக்னத்திற்கு பன்னிரண்டாம் வீட்டிற்கு உரிய கிரகம் இரண்டாம் வீட்டில் அமர்ந்து சுபகிரகபார்வை பெற்று திசைநடைபெறும்போது சொந்தவீடு கட்டும் யோகம் உண்டாகும். சித்திரை 10ஆம் தேதி 23.4.2020 வியாழக்கிழமை வாஸ்துநாள். காலை 8.54 முதல் 9.30 மணி வரை வாஸ்து நேரம். இந்த நேரத்தில் வாஸ்து பகவானை வணங்கினால் வீடு கட்டும் யோகம் தானாக தேடி வரும்.